இதில் திண்டுக்கல் சாலையில் இருந்து குருவிக்காரன் சாலை வரை வைகை வடகரை சாலை அமைக்கும் பணி ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்த நிலையில் கோரிப்பாளையத்தில் இருந்து வடகரை நான்கு வழிச்சாலை செல்ல வசதியாக, தத்தனேரி பகுதியில் கூடுதல் இணைப்பு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சகம் சுமார் ரூ.950 லட்சம் ஒதுக்கீடு செய்து உள்ளது.

Published Date: September 28, 2022

CATEGORY: CONSTITUENCY

மதுரை, செப்.27- மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சி.ஆர்.எஃப் திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் ஆற்றங்கரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் சாலையில் இருந்து குருவிக்காரன் சாலை வரை வைகை வடகரை சாலை அமைக்கும் பணி ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்த நிலையில் கோரிப்பாளையத்தில் இருந்து வடகரை நான்கு வழிச்சாலை செல்ல வசதியாக, தத்தனேரி பகுதியில் கூடுதல் இணைப்பு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சகம் சுமார் ரூ.950 லட்சம் ஒதுக்கீடு செய்து உள்ளது.

பணி தொடக்கம்

மதுரை செல்லூர் இணைப்பு பாலத்துக்கான பணியை தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செல்லூர் பகுதியில் அமைய உள்ள இணைப்பு பாலம், 11 கண்களுடன் 320 மீ.நீளம் மற்றும் 7.50 மீட்டர் அகலம் உடையதாக இருக்கும். இதன் மூலம் மதுரை நகரின் மேற்குப் பகுதியில் இருந்து கிழக்குப் பகுதிக்கு வைகை வடகரை சாலை வழியாக நகரப் போக்குவரத்தை திருப்பிவிட்டு நெரிசலைத் தவிர்க்க இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Media: Dhinathanthi