மாநிலங்களுக்கு இடையிலான மேம்பட்ட உறவுகளின் மூலம் கூட்டாட்சி தன்மையை வலுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது

Published Date: February 19, 2022

CATEGORY: FEDERALISM

கடந்த ஆண்டு மே 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு முன்பாகவே எனது தொலைபேசி அலற தொடங்கியது. காரணம்,தமிழ் நாட்டின் நிதியமைச்சராக அப்போது  புதிதாக பொறுப்பேற்றிருந்த டாக்டர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஒரு சக்திவாய்ந்த "கோவா மக்களுக்கான அறிக்கை" .செல்போன் திரையில் அச்செய்தியை கண்டவுடன் முதலில் சிறிது திகைத்துப் போனேன், பிறகு ஆச்சரியத்துடனும், குதுகலத்துடனும் கூச்சலிட்டு மகிழ்ந்தேன். ஏனெனில் நான் இதற்கு முன்னர் இதுபோன்றதொரு அறிக்கையைப் படித்ததில்லை.பலருக்கும் இதே எண்ணம் ஏற்பட்டது. 

சில நாட்களுக்குப் பிறகு திரு சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் "சமகால இந்திய அரசியல் விமர்சனங்களில்  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் இந்த அறிக்கை இன்றளவும் சிறந்ததாக இருக்க்கிறது எனக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்"

பிடிஆர் ( மக்களால் இப்படித்தான் அழைக்கப்படுகிறார்) இந்த செய்தியை தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு பதிவிட்டார்.  அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கோவாவின் போக்குவரத்து அமைச்சர் மௌவின் கோடின்ஹோ “பெரிய மாநிலத்தில் இருந்து வருவதால், தங்களுக்கு அதிக  வாக்குகள் வழக்க வேண்டும் என்பதுதான் தியாகராஜனின்  நிலைப்பாடு போலும்.  நான் பெரியவன், நீ வாயை மூடு என்று சொல்வது போல் இருக்கிறது அவர் பேசுவது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அவர் நடந்துகொண்ட விதத்தை கண்டிக்கிறேன். [தமிழக முதல்வர்] ஸ்டாலின் தனது அமைச்சரைக் கண்டித்து அவரை மன்னிப்பு கேட்க வைக்கவேண்டும் வேண்டும்” என்று  ஒரு கூட்டத்தில் தெரிவித்து, தனக்கு ஆதரவு திரட்ட முயற்சித்தார். அதன்பின் தான் பிடிஆர் இவ்வறிக்கையை பதிவிட்டார். 

சாதாரணமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை புறக்கணிப்பது இயல்பான ஒன்று. ஆனால் பிடிஆர் இதற்கு நேரடியாகவே பொதுவெளியில் எதிர்வினை ஆற்றினார். இரண்டு அறிவிப்புகளுடன்  ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஒன்று "எத்தகைய விலை கொடுத்தாலும் தனது கொள்கையில் மாறாத உறுதி கொண்டிருப்பது என் குணத்தின் அடையாளம்" என்பதாகும். வேடிக்கையான மற்றொன்று "குறைகுடம் தழும்பும்"  என்பதாகும். "தகுதி இல்லாத இடங்களில் இருந்து எழும்பும் கூச்சல்களுக்கு பொதுவாக நான் எதிர்வினையாற்றுவது இல்லை, ஆனால் விதிவிலக்காக இந்த பதிவிற்கு இரண்டு காரணங்கள் உள்ளன” என்று தொடர்கிறார்.

கோவாவின் போக்குவரத்து அமைச்சர் தான் கோவா மக்களை அவமதித்து விட்டதாக முன்வைத்த ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அதற்காக எனது தலைவரான தமிழக முதலமைச்சரிடம்  தன்னை கண்டிக்க கூறியதற்கு பதிலடி கொடுக்கவும், 

இரண்டாவது முக்கியமான காரணம் எப்படி இதுபோன்ற நபர்கள் ஜிஎஸ்டி கவுன்சிலின் பலன்களையும், தரத்தையும் பாதிக்கின்றனர் என்பதை ஒட்டு மொத்த இந்திய நாடும் அறியவேண்டும் என்பதாகும். 

அற்புதமான, நகைச்சுவை நயம் மிக்க அறிக்கை மூலம் அமைச்சர் அதனை விளக்கினார் "ஒரு மாநிலம் = ஒரு ஓட்டு என்கிற ஜிஎஸ்டி அமைப்பு முறை அடிப்படையில் நியாயமற்றது" மற்றும் "ஒன்றிய அரசிடமிருந்து முடிந்தவரை  அரசாங்கத்தின் கீழ் நிலை அடுக்குவரை அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் உண்மையான கூட்டாட்சி முறைக்கும், மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் திராவிட இயக்கம், நீண்டகாலமாகவே தமது சுயமரியாதை மற்றும் சுய நிர்ணய கோள்கையின் நீட்சி என்ற வகையிலேயே  உள்ளாட்சிமுறைக்கு குரல்கொடுத்து வருகிறது" . 

அத்தோடு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைத்த தமது வாதங்கள் அனைத்தும், இந்த இரு கொள்கையை ஒத்ததாகவே முற்றிலும் அமைந்தது என்பதையும் , இக்கொள்கைகளால் தமிழ்நாட்டிற்கு எதிர்காலத்தில் வருவாய் இழப்பு ஏற்படும் என்றாலும் அதில் உறுதியாக உள்ளதாகவும் பிடிஆர் விளக்கினார்.

 மதுரை மத்திய  சட்டமன்ற உறுப்பினரான பிடிஆர் ஒருபடி மேலே சென்று "உங்களது போக்குவரத்து துறை அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில் இருந்து என்கின்ற கேள்வி அவரது புரிதலில் குறைபாடா அல்லது நேர்மையில் குறைபாடு உள்ளதா அல்லது இரண்டிலுமா என்பதாகும். ஆனால் உங்களுக்கு அவரது வரலாறு நன்கு தெரியும் என்பதால் இந்த சம்பவத்திற்கு முன்பே அவரைப் பற்றி ஒரு முடிவிற்கு வந்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவர் மீண்டும் மீண்டும் கோவிட் தொடர்பான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் மீதான ஜிஎஸ்டி 5% லிருந்து 0% ஆக  மனிதாபிமான அடிப்படையில் குறைப்பதற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தார். 

அவரது கருத்துக்கள் கூறியதையே மீண்டும் கூறுவதாகவும், மிகைப்படுத்தப்பட்டதாகவும், மற்றவர்களின் கருத்துக்களை மதிக்காமல், பிற மாநில அமைச்சர்களின் கருத்துக்கள் மீது நல்லெண்ணம் கொள்ளும் அடிப்படை மாண்பற்றதாகவும் இருந்ததை நான் கவனித்தேன். சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேச அமைச்சர், மற்ற எல்லா மாநிலத்திலிருந்து கலந்துகொண்ட அமைச்சர்கள் பேசியதை விட உண்மையில் கோவா அமைச்சர் பல மடங்கு அதிகமாக  பேசினார் . இத்தகைய போக்கு இந்திய நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் உகந்ததா என்பதை பொது மக்களே முடிவு செய்யட்டும்”

அவர் தனது பதிவை இப்படி நிறைவு செய்திருந்தார். " நான் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அவர்களுக்கு நான் எந்தத் தீங்கையும் இழைக்கவில்லை. மாறாக உண்மையில் மாநில அரசுகளின் உரிமைகளுக்காகவே வலுவாக குரல் கொடுத்தேன்.  அதற்காக எந்த பாராட்டையும் எதிர்ப்பார்க்கவில்லை. மாநில உரிமைகளை வலுப்படுத்துவது, கூட்டாட்சியின் மூலம் அதிகாரங்களை பரவலாக்குவது ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதே எனது நிலைப்பாடு. 

அதேசமயம் இத்தகைய ஒரு அமைச்சரை கோவா மக்களாகிய நீங்கள் பெற்றிருப்பதற்கு எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அழகான மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி  கோவா மக்களுக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியதற்கு மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் மீது நான் குற்றம் சாட்டுகிறேன். 

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பாஜகவிடம்  நான் முன்வைக்கும் கோரிக்கை ஒன்றுதான்.  எம்எல்ஏக்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் குறைந்தபட்ச தரக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் கோவாவும், இந்த நாடும் அதிக இடையூறுகளிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கும். "

பிடிஆர் இந்த அறிக்கையை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே சமூகவலைத்தளத்தில் இது பெரிதும் வரவேற்கப்பட்டது. கோவாவில் இருந்து வந்த வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. ஏனெனில் அக்காலக்கட்டத்தில் கோவா  கோவிட் இரண்டாவது அலையால்  கடுமையான பிடியில் சிக்குண்டு, ஆக்சிஜன்  பற்றாக்குறையால் தினமும் பல குடும்பங்கள் பலியாகின. ஓரிரு நாட்களுக்குப் பிறகு உயிரிழப்புகளை குறைக்க மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பட்ட நிலையில் மாநில உயர்நீதிமன்றமே  இவ்வாறு நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியது: "நாங்கள் கூட்டாக தோல்வியடைந்து விட்டோம் அதற்காக மிகவும் வருந்துகிறோம் நாங்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறோம்" 

அதன் பின்னர், வார்த்தைகளால் விவரிக்கமுடியாதபடி நடைபெற்ற நிர்வாக சீர்கேட்டை  பற்றி பேசுகையில் பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநரான சத்தியபால் மாலிக் (அவர் மேகாலயாவுக்கு இறுதியில் மாற்றப்பட்டார்) "பெருந்தொற்று விவகாரத்தில் கோவா அரசாங்கம் மேற்கொண்ட அத்தனை நடவடிக்கைகளிலும் ஊழல் நடைபெற்றுவந்தது. நான் அது குறித்து ஆய்வு செய்து பிரதமருக்கு தெரிவித்தேன். இன்று இந்நாட்டின் மக்கள் உண்மையை பேசத் தயங்குகிறார்கள்" என ஒப்புக்கொண்டார் .

 

தவறான நிர்வாகத்தின் பிடியில்  கோவா  சிக்குண்டிருந்த சூழலில் பி.டி.ஆரின் அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணங்களை ஆழமாகப் பிரதிபலிக்கும் முழக்கமாக அமைந்தது.  அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு பாராட்டுக்களை தெரிவித்தனர், என்னிடம் வந்த பல கோரிக்கைகளை ஏற்று கோவாவின் நூற்றாண்டு பழமையான ஓ ஹெறல்டோ(O Heraldo) செய்தித்தாளில் கோவா மக்களின் ஒப்புதலோடு ஓர் திறந்த கடிதத்தை எழுதினேன். அந்த கடிதத்தில் என்னை சுற்றி நிரம்பியிருந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும், பி.டி.ஆரின் இந்த முக்கியத்துவம்வாய்ந்த அறிக்கையில் உள்ள உறுதிப்பாட்டிற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் நான் அவருக்கு இவ்வாறு எழுதினேன் " பல ஆண்டுகளாகவே கோவாவின் அரசியல் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையற்றதாகவும், சூழ்ச்சிகள் நிரம்பியுள்ள இருப்பதை நீங்கள் அறிய வேண்டும். எனவே இந்தியாவின் சிறிய மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உங்களது சக அமைச்சர் "மீண்டும் மீண்டும் கோவிட் தொடர்பான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் மீதான ஜிஎஸ்டி 5%த்தில் இருந்து 0% ஆக குறைப்பதற்கு எதிராக குரல் கொடுத்தார்" என தெளிவாக விவரித்ததன் மூலம் நீங்கள் மிகப்பெரிய சேவையை செய்துள்ளீர்கள். 

நான் இந்த எச்சரிக்கையையும் அக்கடிதத்தில்  இணைத்திருந்தேன். "பாபாசாகேப் அம்பேத்கரின் அசைக்கமுடியாத இந்த பிரகடனத்தை கவனியுங்கள் ' சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதியான முழுமையான உரிமையாக இருக்க வேண்டும்' மற்றும் 'மாற்றுத்தரப்பினர் என்ன செய்ய விரும்புவார்கள் என்பதைப்பற்றி அதில் கருத்தில் கொள்ளக்கூடாது' "  பெரும்பான்மைவாதத்தை எதிர்கொள்ளும் அனைத்து சமூகங்களுக்காகவும் அவர் பேசினார்.  கோவா தமிழ்நாட்டை விட அளவிலும் மக்கள்தொகை அடிப்படையிலும் மிகச் சிறிய மாநிலம் என்றாலும் இவ்விரண்டின் வளர்ச்சியும் சம காலத்தில் இந்தியாவை கடினமான சூழலில் சிக்கி வைத்துள்ள சக்திகளால் பெரிதும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளன என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். அக்கடிதத்தில் இந்த கோரிக்கையையும் இணைத்திருந்தேன் "கோவா மக்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்ட உங்களது அசாதாரணமான மற்றும் மிகவும் வரவேற்கத்தக்க கருத்துக்களுக்கும், அதில் உள்ள மகத்தான உண்மை தன்மைக்கும் கோவா மக்கள் ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், அத்தோடு இவ்வாறு தங்கள் மாநிலத்தின் நலனுக்காக போராடும் உங்களை போன்றோரை பெற்றிருப்பது தமிழக மக்களின் அதிர்ஷ்டம் என நாங்கள் கருதுகிறோம். எங்களின் நலனையும் மனதில் கொள்வீர்கள் என நம்புகிறோம்" 

கடிதம் நாட்டின் இவ்விரு பகுதிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றது, திடீரென தமிழ்நாட்டிலிருந்து என்னை ட்விட்டர் தளத்தில் அதிகம்பேர் பின்தொடர்ந்தனர். அவர்களில் பெரும்பாலானோர்  சுயவிவரத்தில் "திராவிடியன் ஸ்டாக்" என்ற திமுகவின் முத்திரை வாசகம் இடம்பெற்றிருந்தது. அதேசமயம் கோவாவிற்கு பி.டி.ஆரின் எதிர்வினை பெரும் நிவாரணமாக அமைந்தது. ஏனெனில், கடைசியாக குறைந்தபட்சம் ஒரு அரசியல் தலைவராவது எங்களது அவல நிலையைப் பற்றி அறிந்திருந்தார் என்பதே. அவரது தொகுதி எங்கள் மாநில எல்லையில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்பது இங்கு முக்கியமில்லை. பிடிஆர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் "கோவாவில் எனது கடிதம் இப்படி வரவேற்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியமுற்றேன், கோவா நான் நீண்டகாலமாக வியந்து  ஆனால் நேரில் கண்டிராத மாநிலம், முதலில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சரின் மோசமான நடவடிக்கையைக் கொண்டு அம்மாநிலத்தை குறைத்து மதிப்பிட்டேன், ஆனால் அங்கு மிகப் பெரிய அளவிற்கு முற்போக்குத் தன்மை இருப்பதாக தற்போது கருதுகிறேன்" எனக் கூறியிருந்தார்.

அந்த முற்போக்கு பார்வை  என்பது நிச்சயம் கூட்டாட்சிமுறையே ஆகும். பிடிஆர் அவர்களுக்கும் எனக்கும் பொதுத் தளத்தில் நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் மாநிலங்களுக்கு இடையிலான உரையாடல் என்கிற உணர்விலிருந்து நடைபெற்றது. அது தற்போது அரிதாகிவிட்டது, ட்விட்டரில் ஒருவர் இக்கருத்து பரிமாற்றத்தை " உண்மையில் நமது அரசியல் பொருளாதார ஜனநாயகத்திற்கான நல்ல தொடக்கம்" என அழைத்தார். 1947 ஆம் ஆண்டு முதல், குறிப்பாக மோடி-ஷா கூட்டணி டெல்லியில் கட்டுக்கடங்கா அதிகாரத்துடன் அமர்ந்த 2014 முதல்  ஒன்றிய அரசு தேசிய தகவல் தொடர்புக்கான வழிமுறைகள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, முன்னர் ஆட்சி செய்த காலனித்துவ அதிகார இயந்திரத்தை மிக நெருக்கமாக பிரதிபலிக்கிறது.  இதனை அலெக்சாண்டர் ஹாமில்டன் அவர்கள் 1788இல் வெளியான தனது 'ஃபெடரலிஸ்ட் பேப்பர்ஸ்' இல் " நீங்கள் முதலில் ஆளப்படுபவர்களை கட்டுப்படுத்த அரசாங்கத்தை செயல்படுத்த வேண்டும், அதற்கடுத்து தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்" என துள்ளியமாக எச்சரித்திருந்தார். அதையே திரு பி.டி.ஆர். அவர்கள் இந்த மாத தொடக்கத்தில் வெளியான அவுட்லுக் பிசினஸ் இதழில் நமது நாடு முதலாளித்துவ அமெரிக்கா அல்லது கம்யூனிச சீனாவை விட குறைந்த அளவு கூட்டாட்சி தன்மை கொண்டதாக உள்ளது என சுருக்கமாக குறிப்பிட்டார்.

"அமெரிக்கா மற்றும் சீனாவில் அதிகாரப் பரவலாக்கம் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது. அமெரிக்காவில் காவல்துறை முதல் பள்ளி நிர்வாகம் வரை கிராமம் / ஆட்சி/ நகராட்சி ஆளுகையில் உள்ளது. விற்பனை வரியை மாநிலம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளே முடிவு செய்யும். வருமான வரிகளை கூட மாநிலம் அல்லது நகராட்சி தீர்மானிக்கும்.  சீனாவிலோ உள்ளாட்சி அமைப்புகளே உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான உரிமங்களை வழங்குகிறது. நகராட்சிகள் தங்களுடைய சொந்த காவல்துறையை வைத்திருக்கின்றன, உரிமங்களை மாநில அரசுகளே வழங்குகின்றன. அதிகாரப் பரவலாக்கம் 3 மிகப்பெரிய விளைவுகளை உருவாக்குகின்றன : மிகப்பெரிய அளவிலான சுயநிர்ணயம்; உள்ளூர் சூழலுக்கேற்ற கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பது மற்றும் மிகப்பெரிய அளவிலான பொறுப்புடைமை ஏனெனில் உள்ளாட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வாக்காளர்களுக்கு தேசிய அரசு அதிகாரிகளை விட நேரடியாக பதிலளிக்க கூடியவர்களாக உள்ளார்கள். 

"சீனா அமெரிக்கா ஆஸ்திரேலியா சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட்டாட்சி தன்மையை சரியாக புரிந்துள்ளார்கள் என்று நம்புகிறேன், ஆனால் இந்தியா அதனை முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவின் அளவையும், இன்றைய சர்வாதிகார ஆட்சியாளர்களின் கணக்கில் கொண்டால் இப் பிழை உண்டாக்கும் விளைவுகள் அபாயகரமானதாக உள்ளன" என்றார்  பிடிஆர், அவரது வாதத்தின் சாராம்சம் இதுதான்: "பாசத்திற்காக விரைவுப் பாதையாக அமையக்கூடிய வலிமையானவர்களின் கதையாடலுக்கு மாற்றாக நாம் ஒரு கதையாடலை உருவாக்க வேண்டும். ஆனால் எதார்த்தம் என்னவெனில், சர்வாதிகார ஆட்சிமுறையானது சரியான விளைவுகளை வழங்க இயலாது, ஏனெனில் இந்தியாவின் அளவு மற்றும் இங்கிருக்கும் சிக்கல்களை அத்தகைய வழியில்  நிர்வகிக்க முடியாது. எனவே, ஆபத்து என்னவென்றால், நாம் பொருளாதார சிதைவு மற்றும் சமூக மோதல்களை நோக்கிச் செல்கிறோம், மேலும் மொத்த பொருளாதாரம் / வளர்ச்சி / வேலைவாய்புகள் உள்ளிட்டவற்றில் அடைந்த  தோல்விகளில் இருந்து நம்மை திசைதிருப்ப பிளவுகளைப் பயன்படுத்துவதன் நச்சு வட்டம் ஏழு தசாப்தங்களாக ஓர் ஜனநாயக நாடாக இங்கு கட்டமைக்கப்பட்ட மதிப்பீடுகளின் அழிவை துரிதப்படுத்தும்” ,என்று  மின்னஞ்சலில் அவர் மேலும் விவரித்திருந்தார் 

தென் இந்தியாவுடன் பிற அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது  ஒரு தவிர்க்க முடியாத பகுப்பாய்வு ஆகும். ஒட்டுமொத்த வடகிழக்கு பகுதிகளும் , அப்பகுதிகளுக்குறிய நலன்களில் இருந்து மாறுபட்ட நலன்களில் கவனம் செலுத்தும் வல்லாதிக்க ஒன்றிய சக்திகளால் மோசமான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நிச்சயமாக பிடிஆர் இன் பகுப்பாய்வு என்பது கோவாவுக்கு இறை போதனை போன்றது , ஏனேனில் இங்கு  மோடி - ஷா கூட்டணிக்கு வரையறை இல்லாமல் அடிபணிவதே அடிப்படை அரசியல் நயம் என்ற நிலை உள்ளது. இதன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் பிரமோத் செவன்திடம் நீங்கள் பாராட்டக்கூடிய வேறொரு முதலமைச்சர் யார் என்ற கேள்வி முன்வைக்கும்போது அவர் யோகி ஆதித்யநாத் என்று விடையளித்ததையும், இவ்விடை மக்களை திகிலடைய செய்யுதது என்றாலும் அவருக்கு இது ஒன்று தான் சரியான பதில் என்று தெரிந்திருந்ததன் காரணத்தையும் புரிந்து கொள்ள முடியும். இதேபோல் 2016இல் காங்கிரஸிலிருந்து பாஜகவிற்கு மனோகர் பாரிக்கரால் அழைத்துவரப்பட்ட மௌவின் கொடின்ஹோ தனது விஷ்வகுருவான மோடியின் மீது உள்ள அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக " அனைத்து முக்கிய பிரதமர்களும், ஜனாதிபதிகளும் ஏன் மோடிஜி குறிப்பிடுகிறார்கள் என்றால் அதற்கு  அவரது தலைமைப் பண்பு தான் அதற்கு காரணம்" என்றார்.

அவர் இதனை மீண்டும் மீண்டும் உரக்கக் கூறி, தனது அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதால் அது உண்மையாகிவிடுமா? நாடு முழுவதையும் வெற்றிகரமாக அதனை ஏற்றுக்கொள்ள செய்ய முடியுமா? இங்கே, தமிழ்நாடும், பி.டி.ஆர் இருக்கும் கட்சியான திமுகவும்  இந்தியாவிற்கான வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த சீர்திருத்தத்திற்கான உந்துதலை ஏற்படுத்தும் ஓர் கூட்டமைப்பை உருவாக்க மிகவும் உறுதியான யோசனையை வழங்குகின்றன. கடந்த மாத இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கட்சியின் திராவிட மாதிரியான அனைவருக்கும் அனைத்தும் என்கிற அடிப்படையில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட தலைவர்களைக் கொண்டு சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை தொடங்குவதாக அறிவித்தார். அதன் மூலம் அவர் வெளிப்படையாக கூறாத வாக்குறுதி  : எங்களது அரசு தமிழ்நாட்டில் ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்படுகிறது, அனைவருக்கும் அதற்கான தகுதி உள்ளது. 

பி.டி.ஆர் என்னிடம் " இங்கு மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பது இந்த நாட்டைப் போலவே பழமையானது. நமக்கு முந்தைய மிக உன்னதமான தலைவர்கள் மாநிலங்களுக்கான கவுன்சிலை உருவாக்கினர், ஆனால் தற்போது  அது திறம்பட சிதைக்கப்பட்டுள்ளது, அது புத்துயிர் பெற வேண்டும். ஒன்றிய அளவில் கூட்டணி அரசுகள் நீண்ட காலம் ஆண்டது அத்தகைய தளத்திற்கான தேவையை மழுங்கடித்திருக்கலாம். பாஜக அதற்கடுத்து காங்கிரஸ் ஆகிய  பல மாநிலங்களில் இயங்கும் (நான் தேசியக் கட்சிகள் என்று அவற்றை அழிக்க மாட்டேன்; ஏனெனில் எந்த கட்சியின் இருப்பும் உண்மையில் தேசிய அளவில் இல்லை) இரு கட்சிகளும் தங்களது சொந்த கட்சியிலேயே அத்தகைய ஒரு கவுன்சிலுக்கு மாற்றாக பார்க்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. அதேபோன்று அனைத்து கட்சிகளிலும் நிலவுகின்ற தனிநபர் வழிபாடும் மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவுகளுக்கு  எதிராக அமையும். ஆனால் மாநிலங்களுக்கு இடையிலான உரையாடல் தொடர்ச்சியாக நடைபெறுவது ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது என நான் கருதுகிறேன்" எனக் கூறினார்.

 

Media: Outlook India