தமிழ்நாடு 100 ஆண்டுகளுக்கு முன்பே மதத்தை ஜனநாயகப் படுத்திவிட்டது, இங்கு மதவாதம் காலூன்றுவது கடினம்.

Published Date: April 4, 2022

CATEGORY: POLITICS

நூறாண்டுகளுக்கு முன்பே மதத்தை ஜனநாயக படுத்தி விட்டதால் தமிழ்நாட்டில் தீவிர இந்துத்துவா வளர்ச்சியடைய முடியாது  என்பதோடு தமிழ்நாட்டின் அடிப்படையான விழுமியங்கள் எந்தவித தீவிரவாதத்தாலும் சீர்குலைக்க முடியாது என்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு மாநிலத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் முதலீடுகளை ஈர்க்க முயற்சிபதோடு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்சமயம் அதிகரித்துவரும் மதவாத பதற்றத்தின் காரணமாக அங்கிருந்து தங்களின் வணிகத்தை மாற்ற விரும்பும் நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் இடமளிக்கும் பணிகளையும் மேற்கொள்ளும் என்றும் கூறினார். 

திரு தியாகராஜன் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின்  குறைபாடுடைய அமலாக்கம் குறித்தும் , பல்வேறு நிறுவனங்கள் மீது ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டை அதிகரித்து வரும் போக்கு குறித்தும் கவலை தெரிவித்தார். இவை நாட்டிற்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு அச்சுறுத்தலையும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்பதால் கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்களை தமிழ்நாடு கூர்ந்து கவனித்து வருகிறது என்று தமிழ்நாடு நிதியமைச்சர் தெரிவித்தார். அத்தோடு "தமிழ்நாட்டில் தொழிலை விரிவு செய்ய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவிற்கு ஆர்வம காண்பிக்கின்றன, நாங்கள் ஏற்கனவே அந்தப் போட்டியில் இருக்கிறோம், இதுகுறித்து பலரும் தீவிரமாக குரல் எழுப்பி வருகின்றனர் , எங்கள் அரசு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது" என்கிறார்.

தமிழ்நாட்டில் செய்யப்படும்  முதலீடுகள் 53 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் . நிதி முதலீட்டாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக அடுத்த ஆறு மாதங்களுக்குள் மாநில அரசு பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதென அவர் கூறினார் . “ஒரு ரூபாயை நாம் மூலதனத்தில் முதலீடு செய்தால், அதனை வெளி முதலீட்டைக்கொண்டு ஈடுசெய்ய விரும்புகிறோம்” 

கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொழில் துறை தலைவர்களை சந்திப்பதற்காக துபாய் சென்றார், அரசாங்க அறிக்கையின்படி தமிழ்நாட்டில் 14,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க கூடிய ரூ 6,100 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன.

நான்கு தலைமுறைகளாக திராவிட அரசியலுடன் நெருங்கிய பிணைப்பை கொண்டுள்ள திரு தியாகராஜன் அவர்கள் தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டாலும் இந்த மாநிலம் இந்துத்துவாவின் பரவலுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கூறுகிறார். "தமிழ்நாடும் இந்துத்துவ மாயமாக மாறினால் அதுவே நமது நாட்டின் மதசார்பற்ற ஜனநாயகத்தின் சவப்பெட்டிக்கு அடிக்கும் கடைசி ஆணியாக இருக்கும், எனவேதான்  அப்படியானதொரு மாற்றம் எப்போதும் நிகழாது என நினைக்கிறேன். தமிழ்நாடு நாட்டிலேயே அதிக ஆன்மீக நம்பிக்கை உள்ள மாநிலம். ஆனால் அது இந்துத்துவாவினால் ஏற்பட்டதல்ல ,மாறாக 100 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் மதத்தை ஜனநாயகப்படுத்தியதால் ஏற்பட்டது" என்றார். அத்தோடு "இங்கு எந்த சமூகத்தினர் வேண்டுமானாலும் கோயிலின் அறங்காவலர் ஆகலாம் எவரும் கோயிலை கட்டலாம் அதனைப் பராமரிக்கலாம். நாங்கள் இதுகுறித்த சிக்கல்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பே சீர் செய்து விட்டோம். எங்களது பண்பாடு 3000 ஆண்டு தன்மைகொண்டது என சமீப காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன , நாங்கள் என்றைக்குமே எந்தவித தீவிரவாதத்திற்கும் எதிராகவே இருந்துள்ளோம்"  எனக் கூறினார்.

தவறான அரசியல் எந்த ஒரு நாட்டிற்கும் நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும், ஏற்கனவே துருக்கி மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் அத்தகைய இன்னல்களை சந்தித்து பிறருக்கு உதாரணம் ஆகியுள்ளன என்று அவர் எச்சரித்தார். நிறுவனங்களை சீர்குலைப்பது நீண்டகால அடிப்படையில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்,  விவாதிக்காமல், ஒப்புதல் இல்லாமல் செயல்படுவது தவறுகளை சரி செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் செய்துவிடும் " உதாரணமாக இலங்கையை பாருங்கள். அங்கு அரசு தங்கள் செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை பெறாமலும் அதனால் தவறுகளை சரி செய்து கொள்ளாத வகையிலும் அனைத்தையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இதன் காரணமாகத்தான் இத்தகைய மோசமான நிலையை அவர்கள் அடைந்துள்ளனர்.வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வளர்ச்சி உறுதி செய்யப்பட்டால், சர்வாதிகார ஆட்சி

நீண்ட காலத்திற்கு தொடரும், ஆனால் அது நடக்காதபோது அது ஆட்சிக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது”

கூட்டாட்சிக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அமைச்சர் ,ஜிஎஸ்டி அமலாக்கம் தொடர்பான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார் .

“அணைகள், துறைமுகங்கள், போக்குவரத்து, கல்வி என அனைத்தையும் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு விரும்புகிறது. செயல்திறனற்றவர்கள் என நிரூபித்தவர்களின் கரங்களில் அதிகாரம் மென்மேலும் குவிக்கப்படுகிறது. அதேசமயம் யாரிடம் அதிகாரம் இருந்தால் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியுமோ அவர்களின் கரங்களில் இருந்து தொடர்ந்து அதிகாரங்கள் பறிக்கப்படுகிறது" என்பதோடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அல்லது ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 19 மசோதாக்கள் இதுவரை அப்படியே நிலுவையில் உள்ளதாகவும், "சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவது, சட்டங்கள் இயற்றுவது இயற்றதான். ஒன்றிய அரசு எங்களை அப்பணியை ஆற்ற விடுவதில்லை" என்றும் கூறினார்.

ஜிஎஸ்டி தமிழகத்தில் பல்வேறு பிழைகள் உள்ளன "ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பின் விளைவுகளில் ஒன்று சரியான விடைகளை, பின்னூட்டங்களை பெற முடியாமல் அதனால் தவறுகளை சரி செய்து கொள்ள முடியாத நிலையாகும். ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு நடுநிலையான அமைப்பு, ஏன் எங்களுக்கு தொழில்நுட்ப ரீதியான தகவல்களை வழங்குவதில்லை? அதிகாரிகள் மக்களுக்கோ அமைச்சர்களுக்கும் பதிலளிப்பவர்களாக இல்லை. இதுகுறித்து டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் நான் கேள்வி எழுப்பும் போது அங்கு யார் யார் குழுவின் உறுப்பினர்கள் என்பதிலேயே குழப்பம் இருந்தது" என்கிறார் தியாகராஜன்.

"இது விளம்பரத்திற்கு பொருந்துவதாகும். மக்களை கவர்வதற்காக மட்டுமே செயல்படுத்த பட்டதாக தெரிகிறது. உண்மையில் விளைவுகளை வழங்குவதற்காக அல்ல. முடிவுகள் எப்போதும் உறுதியளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். 2014 இல் இருந்து அமைப்பில் ஏற்படும் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் தவறான கொள்கை என்பதை என்னால் அறிய முடிகிறது. இத்தகைய திட்டங்களின் அமலாக்கம் என்பது ஒன்றிய அரசு ஒரு பகுதியையும், மற்றவையை மாநில அரசு செயல்படுத்துவதாக இருக்கவேண்டும்.

ஏராளமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு இந்த அமைப்பை சரி செய்ய வேண்டிய நிலை உள்ளது, அதனை சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷ், ஜவுளி பொருட்கள் மீதான வரியையும் , வைரங்கள் போன்றவற்றின் மீதான வரியை ஒப்பிட்டுப் பார்த்தாலே தெளிவாக புரியும்…

மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் என இருதரப்புக்கும் ஒருவர் செய்வது மற்றொருவருக்கு தெரியாத சூழல் உள்ளதால் தரவு பகிர்வு முறை சரிசெய்யப்பட வேண்டும் " எனக் கூறினார்.

"ஜிஎஸ்டி அமைப்பை பொறுத்த வரை அனைவருமே அங்கு பகுதி நேரப் பணியாளர்கள் தான் முழு நேர பணியாளர் என ஒருவரும் இல்லை, எனவே ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு முழுநேர பணியாளர்களைக் கொண்ட செயலகம் தேவை. ஒன்றிய அரசுக்காக காத்திராமல் நாங்களே மூத்த வழக்கறிஞர் அரவிந்த் டதார் லைமையிலான ஆலோசனை குழு ஒன்றை அமைத்துள்ளோம். அதற்கு நாங்களே நிதி அளித்து அதன் அறிக்கைகளை முறையாக ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு சமர்ப்பிக்க உள்ளோம். ஜிஎஸ்டி இல் இருந்து சுமார் 20 லட்சம் கோடி வருமானம் வருகிறது ஆனால் அதில் உள்ள பிழைகளை சரி செய்யப்பட வேண்டும் அதற்கு ஒன்றிய அரசு மாநில அரசுக்கு செவிமடுக்க வேண்டும்" என்றார் தமிழ்நாடு நிதியமைச்சர்.

எரிபொருள் விலை உயர்வுக்கு உக்ரைனில் நடைபெறும் போரை ஒன்றிய அரசு காரணம் செல்கிறது ஆனால் 5 மாநில தேர்தல்கள் நடைபெறும் வரை விலையை உயர்த்தாமல் தற்போது விலையை உயர்த்துவது சந்தேகத்துக்குரியது என்கிறார். மாநில அரசுகளுக்கு மிகக் குறைந்தளவிலேயே நேரடி வரி விதிப்பு அதிகாரம் இருக்கும் நிலையில் மாநிலங்களிடம் விலை குறைக்க சொல்வது நியாயமல்ல எனவும். “நீங்கள் மறைமுக வரியை அதிகம் சார்ந்திருக்கும் வரை எரிபொருள் விலை உயர்வு என்பது இயல்பாகவே நடக்கிறது. ஒன்றிய அரசின் தவறான வரி கொள்கை தான் விலைவாசி உயர்வுக்கு காரணம். அத்தோடு எரிபொருள் என்பது விவசாயம், மீன்பிடி ஆகிய பல்வேறு தொழில்களுக்கு உள்ளிட்டு செலவாக இருப்பதால் இது உண்டாக்கக் கூடிய விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்”  எனக் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள இலவசங்கள் வழங்கும் கலாச்சாரம் & நலத்திட்டங்கள் குறித்த கேள்விக்கு விடையளித்த நிதியமைச்சர் திமுக அரசு இலவச வண்ண தொலைக்காட்சி வழங்க முடிவு செய்ததன் சமூக சூழமைவை  புரிந்து கொள்வது முக்கியம் என்றார், 

 "2006 ஆம் ஆண்டு கலைஞர் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தின் மூலம் எந்த ஒரு ஏழை வீட்டுப் பிள்ளையும் தொலைக்காட்சி பார்ப்பதற்காக பணக்காரன் வீட்டு வாசலுக்கு வெளியே நிற்க தேவையில்லை என்கிற வலிமையான சமூக செய்தியை வழங்கினார். அதுக்கு ஒரு முறை வழங்கப்படும் பொருள். இந்த ஆண்டு நாங்கள் இதுவரை திருமணத்திற்காக வழங்கப்பட்ட உதவித்தொகையை இனி உயர்கல்விக்காக  மட்டுமே வழங்குவது என்கிற கடினமான முடிவை எடுத்தோம்" என்கிறார்.

பெண்களுக்கு பேருந்து போக்குவரத்தை இலவசமாக்கிய மாநில அரசின் முடிவும் பணிக்குச் செல்ல தயாராக உள்ளவர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பங்கினை அதிகம் செய்வது மற்றும் 52 சதவீதமாக உள்ள பணிக்குச் செல்ல தயாராக இல்லாதவர்களின்(இதில் பெரும்பகுதி பெண்கள்) எண்ணிக்கையை குறைப்பது  ஆகிய அரசு இலக்குகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியாகும்,  "ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற திட்டங்களை அதிகரிப்போம்" எனக் கூறும் திரு. தியாகராஜன், அத்தோடு  பெண்கள் கல்லூரிகள் படிக்கவும், வீட்டு வேலைகள் அல்லாத பிற பணிகளில் சேரவும் ஊக்குவிக்கும் திட்டங்கள் மாநில அரசு கொண்டுவரவுள்ளதாகவும் என்றும் தெரிவித்தார்.

பணக்கார மாநிலங்களிடம் இருந்து நிதியை பெற்று ஏழை மாநிலங்களுக்கு வழங்குவது நியாயம் எனில் அத்தகைய பகிர்மானங்கள் பதினைந்து இருபது ஆண்டுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைக்க வேண்டும், ஆனால் இந்தியாவில் அவ்வாறு நிகழ்வதில்லை என்கிறார் "அனைவருக்குமான கல்வி மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகிய இரண்டும் மிக முக்கியமானவையாகும் அவற்றை உறுதி செய்யவில்லை என்றால்,  தற்போது பிஹாரில் சராசரி கல்வி கற்றல் தொடக்கநிலை இரண்டு நிற்றல், தமிழ்நாட்டில் சராசரி கல்வி கற்றார் உயர்நிலைப்பள்ளி நிறைவு என்ற நிலையில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க முடியாது" 

அதிமுக தனது தன்மானத்தை பாஜகவிற்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டதால் அதற்கான விளைவுகளை வரும் காலங்களில் சந்திக்கும்,  இனி அந்தக் கட்சி மீண்டு வருவது கடினம் என்றார்.

மத வழக்கங்கள் ஒன்றும் கருங்கல்லில்  செதுக்கியது அல்ல காலத்திற்கேற்றதுபோல் மாறக் கூடியது எனக் கூறும் தியாகராஜன் "எனது தாத்தா திரு பி.டி. ராஜன் அவர் செய்த சபரிமலை ஐயப்பன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு முன் மதுரைக்கு கொண்டு வந்தார் அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இதனால் தீட்டுப் படும் என பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மதுரை பொற்றாமரைக் குளத்தின் அருகே விவாதம் நடைபெற்றது எனது தாத்தா அனைத்து கடவுள்களும் சமமே என வாதிட்டார். 

அவர்களில் ஒரு பகுதியினர் கோவிலுக்கு வருவதைத் தவிர்த்து தெருவில் வேறொரு கோயிலை அமைத்தனர். அனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே அந்த விவாதம் மீனாட்சி அம்மன் எதனாலும் தீட்டுப் படுத்த முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்தவள் என்பதாக மாறியது… நமது சமூகத்தில் இதுபோன்ற மத வாதங்களை புகுத்துவது கடினம்" என்றார்.

 

Media: Economic Times