மதுரை பகுதி ஒளிமிகுந்த மாநகராட்சியாக மாற்றப்படும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்

Published Date: February 14, 2022

CATEGORY: POLITICS

மதுரை பகுதி ஒளிமிகுந்த மாநகராட்சியாக மாற்றப்படும்

திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரசாரம்

 

மதுரை, பிப்.14: நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரையில் அனல் பறக்கும் பிரசாரத்தை மத்திய தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் செய்து வருகி றார். நேற்று பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: எனது தாத்தா பிடி ராஜன், நீதிக்கட்சி தலைவராக இருந்தவர். எனது தந்தை பிடிஆர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பேரவைத் தலைவராக இருந்தவர். அவர்களை போலவே மக்கள் பணியாற்ற நானும் வந்துள்ளேன். கடந்த தேர்தலில் இரண்டாவது முறையால் போட்டியிட்ட என்னை 34 ஆயிரம் ஓட் டுக்கள் வித்தியாசத்தல் வெற்றி பெறச்செய்தீர் கள். அந்த நம்பிக்கைக்கு பலனளிக்கும் வகையில், நிதித்துறை, அத்துடன் திட்டமிடுதல் வளர்ச்சித்துறை, மனிதவள மேம்பாட் டுத்துறை உள்ளிட்ட 4துறைகளை எனக்கு தலைவர் முதல்வர் மு..ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார்.

 

அதற்கு காரணம். மக்களாகிய நீங்கள் தான். திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதம்தான் ஆகிறது. ஒரு அமைச்சருக்கு 300 கோப்புகள் தான் சாதாரண மாகவரும். ஆனால் 3000 கோப்புகளை கையாண்டிருக்கிறேன். முதல் முயற்சியாக வீடு தேடிச்சென்று கோரிக்கைகளை கேட்டு பெற்று நிறைவேற்றி வருகிறேன். புகார் பெட்டி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் 3,500 கோரிக்கைகளை மனுக்களாக பெற்றோம்.

 

அதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறோம். குறிப்பாக என் தொகுதியில் 900 பேர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுத் தந்திருக்கிறோம்.

 

மதுரை வளர்ச்சிக்காக பலதிட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக கவுன்ச லர்களை வெற்றி பெற செய்யுங்கள். மதுரையை ஒளிமிகு மாநகராட்சியாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறோம். மாஸ்டர் பிளான் திட்டங்களை உருவாக்கி வருகிறோம். மத்திய சிறைச் சாலை வெளிப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. காலியாகும் 40 ஏக்கர் சிறைக்குரிய நிலத்தில் ஆக்கபூர்வ விஷயங்கள் கொண்டு வரப்படும்.

 

மெட்ரோ ரயில் கொண்டுவர திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அனைவருக்கும் வீட்டில் குடிநீர், ஒருங்கிணைந்த பாதாள சாக்கடைத் திட்டம், மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடத்தப்படும். இதற்கு முன்பு நடந்த ஆட்சியாளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் ஜனநாயக படுகொலையை செய்துவிட்டு சென்று விட்டனர்.

 

திமுகவிற்கு வாக்களிப்பதின் மூலம் சிறந்த கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Media: Dinakaran