/

The wise thing to do would be to immediately take remedial measures to improve Tamil Nadu’s Financial State before it proves to be too late.

Published Date: February 18, 2019

DMK IT Wing Secretary, Dr. PTR Palanivel Thiaga Rajan’s suggestions to the Tamil Nadu Government on the Budget for the FY 2019-20

I had released two reports, one on the State of Tamil Nadu’s Finances prior to the release of the Budget for the FY 2019-20 and the other, after the Budget was tabled in the Tamil Nadu Legislative Assembly analyzing the Budget for the FY 2019-20. I also inaugurated the debate on the Budget for the FY 2019-20 in the Assembly & expressed my views. Following this, the Hon’ble Deputy Chief Minister and Minister of Finance, Thiru O.Paneerselvam addressed the various concerns I had raised in my reports during his reply on the Budget Debate.

Prior to this, on the Late Chief Minister Jayalalitha’s advice, the then Finance Minister Thiru O Paneerselvam in the budget session for the FY 2016-17 and Thiru Jayakumar, during the Budget Session for the FY 2017-18 had addressed my remarks. On a similar note, I convey my thanks to Hon’ble Finance Minister Thiru O Paneerselvam has given due importance to my remarks made during the Budget Session for the FY – 2019-20 and has addressed the concerns I raised.

False Estimates cannot hide the Truth

While addressing the remarks made by me during the Budget Debates for the FY 2016-17 & FY 2017-18, several incorrect statistics and misinformation have been made in the Assembly. They are on record. However, I never made any statements or pursue an argument on them because the people of Tamil Nadu have heard both the sides and would have easily understood the truth.

But, the remarks made inside the Tamil Nadu assembly this year are against Social economy as well as Government regulations & legal guidelines in addition to being directly inverse to the real state. So, I am duty-bound to elaborate my views and ensure that the truth is highlighted. Moreover, it is impossible to discontinue this debate because the remarks made are devoid of basic economic understanding and is full of false information that diverts public attention.

The reply delivered in the assembly by the Hon’ble Deputy CM Thiru O Paneerselvam is amusing on the one hand while the irresponsible activities of the Tamil Nadu Government in understanding basic economic principles is sending shock waves on the other. I wish to point out in particular that the purpose of my reports is not to accuse either the Hon’ble Deputy Chief Minister Thiru O Paneerselvam or the former Finance Minister Thiru Jayakumar. I feel that they do not have the view or the inclination or the necessity to scientifically distract people from economic outlook with the help of false information.

But, the fact that the Deputy Chief Minister & Finance Minister of Tamil Nadu was given wrong statistics and he read them out in the State Assembly shows that behind the screen activities are taking place to smarty dupe the the entire State Government Machinery and it has compelled me to highlight these issues to the Tamil Nadu Government and its citizens. 

The Generality in Statistics

The reports I released on the Budget are based on Statistics that have been taken into account starting from the year 2003, with an unbiased approach towards any party, mainly due to the implementation of the "Fiscal Responsibility and Budget Management Act, 2003" in the year 2003. Moreover, while the Tamil Nadu Government is intent on hiding the present plight, the integrity of the statistics dating back to the years prior to 2003 are highly questionable. So, it is not only inappropriate to use the data prior to FY 2003 -04 but also a backward attempt to defame the then DMK Government.

Because, the difference between the regulated Statistics and data post the implementation of the "Fiscal Responsibility and Budget Management Act and the unregulated Statistics and data prior to the year 2003 is akin to the difference between a mountain and a mole. For instance, we use AD and BC to date historical events. The Hon'ble Deputy Cheif Minister could have used the data pertaining to the period between the FY 1991-92 and FY 2002-03 in his reply to the debate on the Budget, to compare DMK & ADMK Governments. But, his singular aim was to discredit the DMK Government using biased data. The people do not trust this reply to the debate on the Budget.

நடுநிலையோடு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகள்:

என்னைப் பொறுத்தவரை, 2003-04 முதல் 2019-20 வரையிலான நிதியாண்டுகளில், திமுக - அதிமுக என கட்சி பேதமில்லாமல், பொதுத்தன்மையோடு ஆய்வுகளை மேற்கொண்டு, உண்மையான புள்ளி விவரங்களை மட்டுமே வெளியிட்டு இருக்கிறேன் என்பதை முதலில் அரசுக்கும், பொதுமக்களுக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனது இரு ஆய்வறிக்கைகளை முழுமையாக படிப்பதன் மூலம் இதனை அனைவரும் எளிதில் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், மாண்புமிகு துணை முதல்வரின் பதிலுரையில், நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முந்தைய (Pre Budget 2019-20) எனது ‘தமிழக அரசின் நிதிநிலை’ குறித்த ஆய்வறிக்கைக்கு மட்டுமே பதில் அளித்து இருக்கிறார். ஆனால், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு (Post Buget 2019-20) வெளியிட்டுள்ள ‘2019-20 நிதி நிலை அறிக்கை மீதான ஆய்வறிக்கை’ குறித்து எந்தவொரு இடத்திலும் பதில் அளிக்கவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த நிலையில், கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் வரவு – செலவு விவரங்கள், திட்டங்களுக்கான மதிப்பீடுகள், நிதிநிலை குறித்த உண்மையான தகவல்களை வெளியிடுமாறு சட்டமன்றத்தில் நான் கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால், இதுவரை உண்மையான விவரங்கள் அடங்கிய கோப்புகளை வெளியிடாமல் மறைத்து வரும் இந்த அரசு, தமிழ்நாடு அரசின் வலைதளப் பக்கங்களில் இருந்த ஒருசில விவரங்கள யும் தற்போது மூடி மறைத்து இருப்பதில் இருந்தே, உண்மையான விவரங்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்பதில் இந்த அரசு எவ்வுளவு முனைப்பு காட்டுகிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.

துணை முதல்வரின் பதிலுரையில் தவறான விவரங்கள்:

1)   1996-97 நிதிநிலைக் குறியீடுகள் வரை ஆய்வுகளை நான் மேற்கொண்டிருக்க வேண்டும் என்று பதிலுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நான் முதலில் கேட்க விரும்புவது, தமிழக அரசின் முந்தைய கால நிதிநிலை அறிக்கைகள், புள்ளி விவரங்கள் குறித்து அரசு வெளியிட வேண்டும் என நான் ஏற்கனவே 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், இன்றுவரை அந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும், ‘நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மை சட்டம் - 2003’ நடைமுறைக்கு வந்த ஆண்டு முதல் அதிமுக – திமுக என்ற வேறுபாடின்றி, எல்லா ஆட்சிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையிலேயே 2019-20 நிதிநிலை அறிக்கை வரையிலான விவரங்களையும், அதில் அதிமுக ஆட்சிகாலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியையும் நான் விரிவாக எடுத்துரைத்துள்ளேன். துணை முதல்வரின் பதிலுரையில், ‘நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மை சட்டம் - 2003’-க்கு முந்தைய காலகட்டங்களில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில், திமுக – அதிமுக ஆட்சிகளின் விவரங்களை மொத்தமாக குறிப்பிடாமல், ஒருசார்பாக தகவல்களை வெளியிட்டு இருப்பது, தவறுகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சியே தவிர வேறல்ல. எனவே, அந்தக் காலகட்டங்களில் அதிமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை புள்ளி விவரங்களையும் உடனடியாக அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட உண்மையான புள்ளி விவரங்களையும், அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேசமான புள்ளி விவரங்களையும் ஒப்பிடுவது சரியான வழிமுறையல்ல. எனவே, மாநில மொத்த உற்பத்தி, வருவாய் இழப்பு, செலவினம் உள்ளிட்ட கணக்கீடுகளை முழுமையாக அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன்.

2)   “நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாகவே சிலர் ஆய்வு” மேற்கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு பதிலுரையில் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு அறிவார்ந்த - அனுபவமிக்க அரசு, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, நாட்டின் நிதிநிலை, வளர்ச்சி, எதிர்காலத் தேவைகள், மொத்த வருவாய், முதலீடுகள், கடன்சுமை உள்ளிட்ட எல்லாவற்றையும் சிந்தித்து, முன்கூட்டியே திறமையாக கணக்கிட்டு, பலதரப்பினருடன் கலந்தாலோசித்து, பலவிதங்களில் ஆய்வு செய்து, அதன் பிறகே நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும். இது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் நடவடிக்கை

தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிகாலங்களில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அரசு அதிகாரிகள் – பொருளாதார வல்லுநர்கள் – தொழில் முனைவோர் உள்பட பலதரப்பினரையும் அழைத்துப்பேசி, அனைவருடைய கருத்துகளையும் ஆய்வுசெய்து, அதன்பிறகே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் வழக்கத்தைப் பின்பற்றினார். அதனாலேயே, கழக ஆட்சிகாலங்களில் தொழில்வளம் பெருகி, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணித்தது என்பதை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன்.

3)   அதுமட்டுமல்ல, எனது ஆய்வறிக்கையில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் அரசு ஒப்புதல் அளித்துள்ள புரிந்துணர்வு ஒப்பந் ங்களின் மூலமாக ஒரு வேலை வாய்ப்பை உருவாக்க சுமார் ரூ.30 இலட்சம் முதலீடு செய்யப்படுவதையும், அதே அறிக்கையில் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களின் மூலம் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்க சுமார் ரூ.1.70 இலட்சம் முதலீடு செய்யப்படுவதையும் ஒப்பிட்டு, இந்த அரசுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தெளிவான திட்டங்களோ – கொள்கைகளோ இல்லை என்று ஆதாரங்களோடு குற்றம் சாட்டியிருந்தேன். ஆனால், பதிலுரையில் இதுபற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. கடந்த 2017-ல் நான் எழுப்பிய கேள்விகளுக்கு, இந்த அரசுக்கு மனதளவில் ஏற்பட்ட உறுத்தலை போக்கும் வகையில் சில பதில்களை அளித்தது போல, இந்த நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையிலும் சில தவறான விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றனவே தவிர, எனது எந்தவொரு கேள்விக்கும் திட்டவட்டமான, நியாயமான பதில்கள் கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

4)   அதேபோல, நேரடி வரிகளை மத்திய அரசு வசூலிப்பதாகவும், மாநில அரசு பெறும் வருவாய்கள் மறைமுக வரிகள் மூலமாக கிடைப்பதாகவும், எனவே மாநிலத்தின் நிதி ஆதாரமாக மறைமுக வரிகள் இருப்பதால் அதை தவறு என்று கூறிவிட முடியாது என்றொரு கருத்தும் பதிலுரையில் இடம்பெற்றுள்ளது. இதில் நான் கேட்க விரும்புவது, சொத்து வரி – பத்திரவுப்பதிவுக் கட்டணம் உள்ளிட்ட பலவித நேரடி வரிகளை மாநில அரசுகள் வசூலிக்கவில்லையா? மேலும், பெட்ரோல் – டீசல் உள்பட பலவற்றிலும் மத்திய அரசு போலவே மாநில அரசும் மறைமுக வரி வருவாய்களில் பங்கு பெறுவதில்லையா? எனவே, அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பதிலுரை என்பதே கடைந்தெடுத்த ஒரு பொய்.

எனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டது போல, மறைமுக வரிகள் மூலம் ஏழைகள் – பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், ஒரே அளவிலான மறைமுக வரிவிதிப்பு முறையால், மூகநீதி கேள்விக்குறியாகி, பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கிறது என்பதே உண்மை. உதாரணமாக, மாதம் ரூ.25,000 வருமானம் கொண்ட நபரும், மாதம் ரூ.5 இலட்சம் வருமானம் கொண்ட நபரும், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு மறைமுகமாக ஒரேவிதமான வரி விதிக்கப்படுவதால், குறைவான வருவாய் கொண்ட குடிமக்கள் சுரண்டப்படுகின்றனர் என்பதே என்னுடைய ஆய்வறிக்கையின் சாராம்சம்.

5)   அதேபோல, திமுக ஆட்சிகாலத்தில் வரி வருவாய் மற்றும் மாநிலத்துக்கான மத்திய பங்கு முறையாக பெறப்பட்டது என்றும் அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் மொத்த வருமானம் (As a Percentage of GSDP) குறைந்து வருவதற்கு காரணம், உற்பத்தி வரியில் 50% வரை மத்திய அரசு பெற்றுக்கொண்டு அதனை திரும்ப வழங்கவில்லை என்றும், மத்திய அரசின் வரியில், மாநில அரசின் வரியைக் கூட்டினால் 15% வரை உயரும் என்றும் தெரிவித்து இருப்பது தவறான புள்ளி விவரம் என்பதோடு இந்த அரசின் இயலாமையையும் காட்டுகிறது.

14வது நிதிக்குழு பரிந்துரைக்கு முன்பாகவே நான் இதுகுறித்து 2016ல் குறிப்பிட்டுள்ளேன்.

2006-11 திமுக ஆட்சிகாலத்தில் மாநிலத்தின் வருவாய் 10.60% ஆக இருந்தபோது, மத்திய அரசின் பங்கில் 3.90% வருவாய் கிடைத்தது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் வருவாய் 9.60% ஆக குறைந்தபோது, மத்திய அரசின் பங்கு 3.25% ஆக குறைந்திருந்தது. தொடர்ந்து, 2016 முதல் தற்போது வரை மாநிலத்தின் உற்பத்தி கடும் வீழ்ச்சி கண்டு 7.55% என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால், மத்திய அரசின் பங்கு 3.29% வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாநில அரசின் மொத்த உற்பத்தி மேலும் மேலும் குறைகிறது. மேற்கண்ட புள்ளிவிவரத்தில் மாநில அரசு குறிப்பிட்டுள்ள 7.55% என்பதே போலியான கணக்கு, 7.46% என்பதே சரியானது.

ரிச ்வ் வங்கி முன்பே குறிப்பிட்டுள்ளபடி, ‘State of State Finances’ கணக்கீடுகளில், வரி வருவாயில் வட்டி சதவீதம் அதிகமுள்ள - கடன்தொகையை முதலீடுகளுக்கு செலவிடாமல், வருவாய்ப் பற்றாக்குறைக்கும், வட்டி செலுத்தவும் அதிகம் செலுத்தும் மாநிலங்களின் உற்பத்தி முடங்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதுதான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதனை, 2016-ம் ஆண்டு உரையில் நான் குறிப்பிட்டுள்ளேன். மேலும், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய வருவாய் (…………………. Center loss on revenue ரூ.90,000 கோடி - ரூ.59,000 கோடி குறைந்துள்ளது. 3.14%)

6)   மாநில வருவாயின் பெரும்பங்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மத்திய அரசுக்கு சென்று விடுவதால் மாநிலத்தின் வருவாய் குறைந்து, நிதி நெருக்கடி ஏற்படுவதாகவும் ஒரு கருத்தை திரு. ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உட்பட எல்லா அரசியல் தலைவர்களும் இந்தக் காரணத்துக்காகவே, மத்திய பாஜக அரசு அவசர அவசரமாக கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரி செயல்படுத்தப்பட்ட முறையை எதிர்க்கின்றனர். ஏன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் ஜி.எஸ்.டி-யை எதிர்த்து, மாநில அரசின் வருவாய் பாதிக்காத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், பாஜக அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரிமுறைக்கு தற்போதைய அதிமுக அரசு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்தது ஏன்?

இதில் மேலும் கவனிக்க வேண்டிய கருத்து என்னவென்றால், மத்திய பாஜக அரசு ஜி.எஸ்.டி வரிமுறையை அறிமுகம் செய்தது கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். ஆனால், 2013-14 ஆம் ஆண்டு முதலே மாநில வருவாய் குறைந்ததற்கு ஜி.எஸ்.டி தான் காரணம் என்று, அடிப்படையே இல்லாத ஒரு பொய்யை இந்த அரசு சட்டமன்றத்தில் முன்வைத்திருப்பது வெட்கக்கேடா து.

7)   இவற்றையெல்லாம் விட இந்த அரசு மேற்கொண்ட மிக மோசமான ஒரு நடவடிக்கை என்னவென்றால், வருவாய்ப் பற்றாக்குறை கடந்தாண்டு ரூ.21,000 கோடியிலிருந்து, தற்போது ரூ.15,000 கோடியாக குறைத்திருப்பதாக இந்த அரசு பெருமை அடித்துள்ளது. இது தவறான தகவல். வரும் காலத்தில் குறைக்கப்படலாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், கடந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.18,000 கோடியாக வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்படும் என அறிவித்தனர். ஆனால், பிறகு ரூ.21,000 கோடி என மாற்றி அறிவித்தனர். அதேபோல, 2015-16ல் ரூ.753 கோடி உபரி நிதி என்றும் அறிவித்தனர். ஆனால், நிதிநிலை அறிக்கையில் ரூ.4,613 கோடி வருவாய்ப் பற்றாக்குறை என மாற்றி அறிவித்தனர். அதாவது, கிட்டதட்ட இருமடங்கு அதாவது, ரூ.5,000 கோடி வித்தியாசம் இருந்தது. கடைசியாக அதையும் மாற்றி ரூ.18,000 கோடி என ஒரு போலியான கணக்கை வெளியிட்டனர். அதுபோலவே, இப்போது ரூ.15,000 கோடி என அறிவித்து இருப்பதும் தவறான புள்ளிவிவரம்.

8)   மேலும், தனது தவறுகளை மறைப்பதற்காக, மாநில பொருளாதாரம் உலக பொருளாதாரத்தையும், தேசிய பொருளாதாரத்தையும் சார்ந்திருப்பதால், அவற்றில் சரிவு ஏற்படும்போது, மாநிலத்தின் பொருளாதாரமும் சரியும் என்றும் ஒரு விளக்கத்தை அளித்துள்ளனர். ஆனால், திமுக ஆட்சி காலத்தில் 2008-09 மற்றும் 2009-10 ஆகிய நிதியாண்டுகளில், உலக பொருளாதாரம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியுற்றதை வசதியாக மறந்துவிட்டு, தமிழக அரசின் வருவாய் குறைந்ததை மட்டும் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் குறிப்பிட்டு இருப்பது அவரது பேச்சு முன்னுக்குப்பின் முரணானது என்பதை வெளிப்படுத்துகிறது. இது அவரது நியாபகக் கோளாறா? அல்லது நியாயக் கோளாறா?

9) அதேபோல, 2006-11 திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகள் மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டப்பட்டதை மறைத்து, உலக பொருளாதார நெருக்கடியில் 2008-10 வரை வருவாய் குறைந்ததை மட்டும் அதிமுக ஆட்சியுடன் ஒப்பிட்டு, இந்த அரசு ஒரு போலியான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சியில் கலால் வரி அதிகம் வசூலிக்கப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் வசூல் குறைந்ததால் வருவாய் குறைந்ததாகவும் ஒரு தவறான விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு அரசாங்கம் வரி வசூல் செய்யவில்லை எனில், அந்த அரசுக்கு எங்கிருந்து வருவாய் கிடைக்கும். அதை செய்ய முடியாத அரசு தனது இயலாமையையே, பலமாக காட்டிக் கொள்வது விசித்திரமானது.

10) 14வது நிதிக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பு, வரி வருவாயில் மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய பங்கு உள்பட இந்த அரசு எதிர்கொள்ள வேண்டிய எல்லா பிரச்சினைகள் குறித்தும் எனது 2016 மற்றும் 2017 நிதிநிலை விவாதங்களில் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல், ஆண்டு வருவாய் விகிதம் – ஐந்தாண்டு வருவாய் விகிதம் ஆகியவற்றை எப்படி கணக்கிடுவது என்ற கல்வியறிவு இல்லாமல், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருப்பதோடு, அதன் மீதான விவாதங்களுக்கு பதிலுரையும் அளித்திருப்பதை எண்ணிப் பார்த்தால், தமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றி ஒவ்வொரு குடிமகனும் பதற்றம் கொள்வர். ஆனால், ‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும்’ என்றகதையாக, உண்மையை மூடி மறைக்க பொய்யான கணக்குகளை இந்த அரசு அள்ளி வீசியிருக்கிறது. உண்மையான புள்ளி விவரங்களை வெளியிட அச்சப்படுவது இந்த அரசின் திறமைக் குறைவா? அல்லது நேர்மைக் குறைவா?

11) அதேபோல, 2011 முதல் 2016 வரை மாநில அரசு பெற்ற நிகர கடன் ரூ.1,15,000 கோடி என்றும், அதில் மூலத்தனங்களில் ரூ.97,216 கோடி செலவிட்டு, மீதமுள்ள தொகையான ரூ.17,784-ஐ கல்வி – சுகாதாரத்துக்காக செலவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தொகையே (85% - borrowing on debt) உத்தேசமானது என்பதால், எதற்காக இந்த நிதி செலவிடப்பட்டது என்பதில் சந்தேகம் எழுகிறது.

அதேநேரத்தில், திமுக ஆட்சிகாலத்தில் உபரி வருமானம் ரூ.47,000 பெறப்பட்டு (105%) வளர்ச்சிப் பணிகளுக்காக செலவிடப்பட்டதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆகவே, துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பதிலுரை வெறும் கண்துடைப்பாக அமைந்துள்ளதே தவிர, தமிழகத்தின் உண்மையான பொருளாதார நிதியை பிரதிபலிப்பதாகவோ, எனது ஆய்வறிக்கைகளில் எழுப்பியிருந்த வினாக்களுக்கு உண்மையான புள்ளி விவரங்களுடன், நியாயமான முறையில் பதிலளிப்பதாகவோ இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!.

 Articles Year Wise: