58 VILLAGE IRRIGATION CHANNEL WATER RELEASE INAGURATION

Published Date: November 14, 2021

CATEGORY: EVENTS

58 கிராம கால்வாயில் தண்ணீ ர் திறப்பு

மதுரை 58 கிராம கால்வாயில் தண்ணீரை அமைச்சர்கள் பி.மூர்த்தி , பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

உசிலம்பட்டி அருகே உள்ள 58 கிராம கால்வாயில் தண்ணீரை திறக்க இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீரை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேற்று காலை திறந்து வைத்தனர். 

       ஆட்சியர்கள் எஸ். அனீஷ்சேகர் (மதுரை), ச.விசாகன் (திண்டுக்கல்), க.வி.முரளிதரன் (தேனி), எம்எல்ஏ.க்கள், விவசாய சங்கப் பிரதிதிநிதிகள் பங்கேற்றனர். விநாடிக்கு 150 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீ ர் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 35 கண்மாய்கள் நிரப்பப்படும். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்துக்குட்பட்ட 1.912 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட 373 ஏக்கர் என மொத்தம் 2,285 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து மொத்தம் 300 மி.க. அடி தண்ணீ ர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறும்போது, வைகை அணையில் தூர்வாருவது குறித்து நிதி அமைச்சர் முதல்வருடன் பேசி வருகிறார் என்றார்.

Media: Hindu Tamil